“டிஜிபி ஜாபர் சேட் முறைகேடு வழக்கு..” சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
ஓய்வு பெற்ற காவல்துறை டிஜிபி ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கு நேற்று ரத்து செய்துள்ளது.. இந்நிலையில், திடீர் திருப்பமாக ரத்து செய்த அந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று திரும்பப் பெற்றுள்ளது .
கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டில் சென்னை திருவான்மியூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாக நடந்ததாக கூறி ஓய்வு பெற்ற காவல் துறை டிஜிபி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கடந்த 2011-ம் ஆண்டில் ஊழல் வழக்கை பதிவு செய்திருந்தனர்..
அந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் “ஜாபர் சேட்” மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2020- ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தனர்..
அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்..
அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது., “தனக்கு எதிரான ஊழல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்துள்ள நிலையில், அமலாக்கத் துறையினர் அந்த வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்கக் கூடாது எனவும், தனது மனைவிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தன் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வு, “ஜாபர் சேட்டுக்கு எதிரான ஊழல் வழக்கை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துள்ளதால் அதன் அடிப்படையில் அமலாக்கதுறை பதிவு செய்த வழக்கை தொடர்ந்து விசாரணை செய்ய முடியாது எனக் கூறி அவர்களுக்கு எதிரான அந்த வழக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக இன்று (ஆக. 23) ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. வழக்கின் விளக்கங்களை பெற விசாரணையை ஆக.27-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..