இல்லத்தரசிகளுக்கான சமையல் குறிப்புகள்..!
பூரி மற்றும் சப்பாத்தி செய்யும்போது மாவினை தேய்த்து உருட்டி வைத்துக் கொண்டு பின் அடுப்பை பற்ற வைத்து செய்தால் கேஸ் வீணாகாது.
உலர்ந்த திராட்சையை காற்று புகாதவாறு ஒரு டப்பாவில் போட்டு இறுக்கமாக மூடி ஃபிரிஜ்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
சமையலில் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை அதிக நேரம் வதக்கக் கூடாது. அவை சிறிது பச்சையாக இருந்தால்தான் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.
ரவா லட்டு செய்யும்போது அதில் சிறிது பால் பவுடர் சேர்த்துக் கொண்டால் அதன் சுவை கூடுதலாக இருக்கும்.
பிஸ்கட்டுகள் நமத்து போகாமல் இருக்க பிஸ்கட் டப்பாவில் மெல்லிய துணியில் சர்க்கரை கட்டி வைக்க பிஸ்கட் நமத்து போகாது.
அசைவ குருமாவில் தேங்காயுடன் முந்திரி சேர்த்து அரைத்து சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
பழங்களை நறுக்கியப்பின் பழுப்பு நிறம் உண்டாகம்ல் இருக்க் எலுமிச்சை சாறு மற்றும் அன்னாசி பழச்சாற்றை தடவி வைக்கலாம்.
புளிக்குழம்பு மற்றும் வெங்காயக்குழம்பில் கடுகுடன் சிறிது சோம்பு சேர்த்து தாளித்தால் குழம்பு நல்லா வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும்.
சோடா உப்புக்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. காரணம் இது சில வயிற்றுக் கோளாறுகளை உண்டாக்கலாம்.
கீரையின் வேர் தண்ணீரில் இருக்கும்படி வைத்தால் மறுநாள் வரை கீரை வாடாமல் இருக்கும்.
எலுமிச்சை பழம் வாடாமல் இருக்க தினமும் ஒரு மணி நேரம் பழத்தை நீரில் போட்டுவைத்து எடுத்தால் ஒரு வாரத்திற்கும் மேலாக வாடாமல் இருக்கும்.
