இட்லி மாவு புளிக்காமல் இருக்க சூப்பர் டிப்ஸ்..!
கீரையை கடைதல் மற்றும் கூட்டு செய்யும்போது கொஞ்சமாக உப்பு சேர்த்து வேகவைக்க அதன் நிறம் மாறாமல் இருக்கும்.
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சூடான தண்ணீர் ஊற்றி பிசைந்து சுட்டால் அதிகமான எண்ணெய் தேவைப்பாடாது.
இட்லி மாவில் காய்ந்த மிளகாயை போட்டு வைத்தால் ஒரு வாரத்திற்கும் புளிக்காது.
பீர்க்கங்காயை சமைப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு ஊறவைக்க அதன் தோல் ஈசியாக வரும்.
கொத்தமல்லி மற்றும் கீரை வாங்கும்போது அதில் பூ மற்றும் பழுப்பு நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும்.
சப்பாத்தி மாவில் கொஞ்சமாக வேர்க்கடலை மாவினை சேர்த்து பிசைந்து சாப்பிட உடலுக்கு நல்லது.
அரிசியில் வண்டு வராமல் இருக்க அதில் மிளகு போட்டு வைக்கலாம்.
அப்பளம் வீணாகாமல் இருக்க அந்த டப்பாவில் பெருங்காயகட்டியை போட்டு வைக்க வேண்டும்.
புளியோதரையில் மிளகு தூள் தூவினால் சாப்பிட சுவையாக இருக்கும்.
தயிர் வடையை ஃபிரிஜ்ஜில் சிறிது வைத்து சாப்பிட சுவை அதிகரிக்கும்.
சப்பாத்தி மாவில் நறுக்கிய புதினா மற்றும் வெந்தயக்கீரை மற்றும் மசாலாப்பொடி சேர்த்து சுட்டால் சூப்பராக இருக்கும்.
பூரி, பஜ்ஜி, சப்பாத்தி, முறுக்கு, சீடை ஆகியவை செய்யும்போது அதில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து செய்தால் நன்றாக வரும்.