இந்த வகை பறவை உங்கள் வீட்டிற்கு வந்தால் ஜாக்கிரதை மக்களே..!
நம் வீட்டில் சிலவகை பறவைகள் மற்றும் உயிரினங்கள் வந்தால் அது வீட்டிற்கு ரொம்ப நல்லாதாம். அவை என்னவென்று சிலவகைகளை பற்றி பார்க்கலாம்.
வீட்டிற்குள் பச்சை கிளி வந்தால் செல்வம் குவியும் என சொல்லப்படுகிறது.
வீட்டில் வானம்பாடி பறவைகள் மற்றும் ஹம்மிங் பறவைகள் வரும்போது அது வீட்டில் வளர்ச்சியை அதிகரிக்கும்.
நீங்கள் மனதில் நினைத்ததை நடக்கபோகும் என்பதை உணர்த்துவதற்கே பச்சை கிளி வீட்டிற்குள் வரும்.
கிராமங்களில் எல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் சிட்டுக்குருவி வசிப்பதற்கு என ஒரு பகுதியை வடிவமைத்து கட்டிடம் கட்டுவார்கள். அப்படி சிட்டுக்குருவி நுழையும் வீடுகளில் செல்வம் பெரும் என்பது நம்பிக்கை.
முருகனுடைய வாகனமான மயில் பறவை வீட்டிற்குள் வந்து சென்றால் அது உங்களுக்கு வரும் ஆபத்திலிருந்து முருகன் உங்களை காப்பாற்றி உள்ளார் என்பது அர்த்தம்.
வீட்டில் வானம்பாடி பறவைகள் மற்றும் ஹம்மிங் பறவை வந்தால் அங்கு வீட்டில் வளர்ச்சி மற்றும் சுபகாரியங்கள் நடக்கும்.
தும்பி வீட்டில் வரும்போது அதில் பணிச்சுமைகளை குறைக்கும். தொழில் செய்தால் அது தொழில் சிக்கல்களை நீக்கும்.
சனிபகவானின் வாகனமான காகம் வீட்டிற்குள் வந்து சென்றால் ஜென்ம சனி மற்றும் ஏழரை சனி உக்கரத்தின் தாக்குதல் குறையுமாம்.
சனி பகவானின் தொடர்புடைய கருப்பு எறும்பானது முட்டையுடன் வீட்டிற்கு வந்தால் வீட்டில் கடன் சுமை குறையும்.
வீட்டிற்கு கருவண்டு வந்தால் அது வீட்டில் தீய சக்தி இருப்பதை குறிக்குமாம்.
வீட்டில் வவ்வால்கள் வந்தால் அது வீட்டிற்கு துரதிர்ஷ்டம் இருப்பதையும் காரியத்தில் தடங்கல்கள் ஏற்படுவதையும் குறிக்கும்.
கழுகு வீட்டில் வந்தால் அது உறவினர்களுடன் பிரிதலை ஏற்படுத்தும், எனவே கழுகு வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.