சுவையான மட்டன் கீமா சமோசா செய்யலாமா..?
தேவையான பொருட்கள்
-
சமோசா பேப்பர் – 7
-
மட்டன் – 250 கிராம்
-
வெங்காயம் – 3
-
பச்சைமிளகாய் – 2
-
கரம் மசாலா பவுடர் – 1/4 ஸ்பூன்
-
தனியா பவுடர் – 1/2 ஸ்பூன்
-
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
-
இஞ்சி பூண்டு விழுது – ஒன்றை ஸ்பூன்
-
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
-
முதலில் ஒரு வாணலை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி அதில் மேலே குறிப்பிட்டுள்ள மசாலாவை சேர்த்து நறுக்கிய மிளகாயும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
-
பின் வேகவைத்த மட்டன் சேர்த்து வதக்கி அதில் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு வதக்க வேண்டும்.
-
அனைத்தையும் நீர் வத்தும் வரை வேகவைத்து பின் இதனை ஆற விட வேண்டும்.
-
பின் சமோசா பேப்பரை எடுத்து கோன் வடிவத்தில் சுருட்டி அதில் மசாலா கலவையை வைத்து மூடி விட வேண்டும்.
-
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சமோசாவை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.