பஞ்சாபில் பஞ்சரான பாஜாக..! மாஸ் பண்ணும் காங்கிரஸ்..!
இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இருப்பதால். டெல்லியில் போட்டியிடும் பிற கட்சிகள் பஞ்சாபில் தனித்தனியே களம் காண்கின்றது. அதற்கு காரணம், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளதால் தான். எனவே அங்கே இணைந்து போட்டியிட்டால் பிற கட்சிகள் தோல்வி அடைவதால் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிட முடிவு செய்தது.
இப்படி மாநிலத்திற்கு ஒரு முடிவு எடுத்து கூட்டணி அமைத்ததால் தான், பாஜக வெற்றி பெற முடியும் என அதைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடி விமர்சித்து. இந்தியா கூட்டணியில் உள்ளவர்களிடையே ஒற்றுமை இல்லை. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு ஒரு பிரதமரை மக்கள் தேர்த்தெடுக்க வேண்டி இருக்கும் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.
பஞ்சாப் மாநிலத்தின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. அம்மாநிலத்தில் மொத்தம் 13 மக்களவைத் தொகுதிகளான காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட 7 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. இந்த தேர்தல் முடிவை மதியம் 3 மணி அளவில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
ஆனால் ஆம் ஆத்மி கட்சி இதுவரை 3 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இந்த முடிவுகள் அரசியல் வியூகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டது என சொல்லலாம்.
இதனால் மக்கள் அனுதாப அலை வீசி வருவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்ததாகவும், அவருக்கு ஆதரவாக மக்கள் உள்ளதாகவும் பேச்சுக்கள் எழுந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் அதைப் பொய்யாக்கி விட்டது என சொல்லலாம்.
இந்த மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் மிகப்பெரிய அலையை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. ஆகவே பாஜக இங்கே ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் பாஜக மாநிலத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் முன்னிலை என சொல்லலாம்.
பஞ்சாப் மற்றும் டெல்லியை பொறுத்தவரைக் காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையேதான் போட்டி நிலவி வருகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் காங்கிரஸ் 9 இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 1 தொகுதியிலும் அகாலி தளம் 2, பாஜக 2 இடங்களிலும் வெற்றிபெற்றது.
ஆனால், இந்த முறை பாஜக தனது 2 தொகுதிகளை இழந்துள்ளது. என சொல்லலாம் லூதியானாவில் பாஜகவின் ரவ்னீத் சிங் பிட்டுவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் அம்ரீந்தர் சிங் ராஜா வார்ரிங் முன்னணியில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதே போல அமிர்தசரஸ், ஜலந்தர், ஃபதேகர் சாஹிப், குர்தாஸ்பூர், பாட்டியாலா மற்றும் லூதியானா தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.
ஹோஷியார்பூர், சங்ரூர் மற்றும் ஆனந்த்பூர் சாஹிப் ஆகிய இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது. முன்னாள் துணை முதலமைச்சரான அக்கட்சியின் சுக்ஜிந்தர் ரந்தவா, குர்தாஸ்பூர் தொகுதியில் தனது எதிர்க் கட்சியான பாஜகவின் தினேஷ் சிங் பாபுவை எதிர்த்து 8,696 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்துள்ளார்.
சீக்கியர்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடிய நாட்டின் எல்லை மாநிலமான பஞ்சாபில், பிஜேபி மற்றும் அதன் முன்னாள் கூட்டணிக் கட்சியான அகாலிதளம் ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன.
மொத்தம் 13 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 2019 ஆம் ஆண்டில், அகாலி தளத்துடன் கூட்டணி வைத்து பாஜக மூன்று மக்களவைத் தொகுதிகளில் (அமிர்தசரஸ், குர்தாஸ்பூர் மற்றும் ஹோஷியார்பூர்) போட்டியிட்டது. கடந்த முறை அமிர்தசரஸ், ஃபரித்கோட், ஆனந்த்பூர் சாஹிப், ஜலந்தர், கதூர் சாஹிப், லூதியானா, ஃபதேகர் சாஹிப் மற்றும் பாட்டியாலா ஆகிய 8 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
அகாலி தளம் பதிண்டா, பெரோஸ்பூர் மற்றும் பாஜக குர்தாஸ்பூர், ஹோஷியார்பூர் ஆகிய இடங்களை வென்றது. சங்ரூரில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..