உடல் எடையை குறைக்க ஒரு ரகசியம்..!
உடல் பருமன் அதிகமாக இருபவர்கள் அதிகம் கவலை கொள்ளுவது உடல் எடையை குறைக்க முடியாமல் போவது தான், உடல் எடையை குறைக்க ஒரு சிலர் தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது உண்டு, அப்படி எதுவும் இல்லமால் உடல் எடையை குறைக்க ஒரு ரகசியம்..
பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த அளவிற்கு உதவுகிறதோ.., அதே அளவிற்கு உடல் எடையை குறைக்கவும் உதவும்.., “நாவல் பழம்” அதிகம் நீர்ச்சத்து நிறைந்த ஒரு பழம் இதை எடுத்துக் கொள்வதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும், மேலும் நீரிழிவு நோய் வராமலும் தடுக்கும்.
நாவல் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும் .., ஒரு சிலருக்கு தொடருந்து நாவல் பழம் சாப்பிடுவது சலிப்பை உண்டாக்கும். அதை கொஞ்சம் வித்தியாசமாக செய்து சாப்பிட்டு பார்த்தால் சலிப்பும் வராது..
நாவல் பழம் ஜூஸ் செய்ய தேவையான பொருள்கள் :
250 கிராம் நாவல் பழம்,
1/2 ஸ்பூன் கருப்பு உப்பு,
1 ஸ்பூன் எலும்பிச்சை சாறு.
செய்முறை :
* நாவல் பழத்தை சுத்தமான நீரில் முதலில் கழுவி கொள்ள வேண்டும்.
* நாவல் பழத்தின் கொட்டையை அகற்றி விட்டு, பழத்தை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* மிஸ்யில் நாவல் பழம், எலும்பிச்சை சாறு, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.. தேவையான அளவு தண்ணீர் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்.
* அரைத்த நாவல் பழத்தை வடிகட்டி தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால்.. சில வாரங்களிலேயே உடல் எடை குறைந்து விடும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..