சூப்பரான சுவையான காஷ்மீரி புலாவ் லன்ச் இப்படி செய்து பாருங்க..!!
வேலைக்கு செல்லும் பல பெண்கள் காலையில் எழுந்து மதிய உணவையும் காலையிலேயே சமைத்து விட்டு செல்வார்கள். நேரம் குறைவாக இருப்பதால் சில சமயம் எளிதாக சமைக்க கூடிய உணவை செய்வார்கள். அப்படி குறைந்த நேரத்தில் சுவையாக செய்யக்கூடிய ஒரு அருமையான ரெசிபி பற்றி பார்க்கலாம்..
தேவையான பொருள்கள் :
பாஸ்மதி அரிசி – 1 கப்,
நெய் – தேவையான அளவு,
எண்ணெய் – 1 ஸ்பூன்,
முந்திரி பருப்பு – 1/2 கப்,
பாதம் – 1/2 கப்,
உலர்திராட்சை – 1/4 கப்,
வெங்காயம் – 1,
பட்டை – 4 துண்டு,
கிராம்பு – 6,
பச்சை ஏலக்காய் – 4,
பிரியாணி இலை – 2,
சோம்பு – 1/2 ஸ்பூன்,
ஷாஜி ஜீரா – 1 ஸ்பூன்,
சூடு தண்ணீர் – 2கப்,
குங்குமம் பூ பால் – 1/4 கப்,
உப்பு – தே.அ,
மாதுளை பழம் – 1/2 கப்,
அன்னாசி பழம் – 1/4 கப்.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் வானொலியில் ஒரு நெய் ஊற்ற வேண்டும். நெய் உருகியதும் முந்திரி, திராட்சை, பாதம் வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் மற்றொரு வானொலியில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடு ஏற்ற வேண்டும். சூடான பின் நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு மொறுமொறுப் பாகும் அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் அதே வானொலியில் நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு, ஷாஜி ஜீரா ஆகியவற்றை சேர்த்து வாசனை வரும் அளவிற்கு வறுத்து வேண்டும். பின் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை அதில் போட்டு 2 நிமிடம் கழுவ வேண்டும்.
பின்பு கொதிக்க வைத்த நீரை அதில் சேர்த்து கலந்து விடவும், அதனுடன் உப்பு, பால் குங்கும பூ, சேர்த்து கலந்து 10 நிமிடம் மிதமான தீயில் வைக்க வேண்டும்.
10 நிமிடத்திற்கு பின் வறுத்த முந்திரி, திராட்சை, பாதம், மற்றும் வெங்காயத்தை அதில் சேர்த்து தூவி கிளறி இறக்கவும். இனிப்பை விரும்புபவர்கள் அன்னாசி பழம் மற்றும் மாதுளை பழத்தை சேர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு செய்தால் சுவையான புலாவ் தயார்.