70 வயதிலும் உழைக்கும் பாட்டி..! ஊரும் உறவும் -24
வேலைக்கு செல்லும் பலரும் இன்று சிந்திப்பது ஒரு நாளாவது ஓய்வு கிடைக்காத என்று தான். ஒரு சிலர் ஓய்வே இல்லாமல் உழைத்து கொண்டும் இருப்பார்கள். 25 வயதிற்கு மேல் அயராது உழைத்துக் கொண்டிருந்தாள்.., அது நாளை கஷ்டப்படாத ஒரு வாழ்கைக்காக, ஆனால் 70 வயதிற்கும் மேல் ஒருவர் உழைத்து கொண்டிருந்தாள்..?
அப்படி இந்த வயதிலும் உழைக்கும் ஒரு பாட்டியின் கதை தான் இது., ஒரு 70 வயது பாட்டி ஒருவர் பிராட்வே பேருந்து நிறுத்தத்தில் பழக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு பழம் வாங்க வந்த நபர் ஒருவர் அந்த பாட்டியை ஏமாற்றி பழங்களை வாங்கி கொண்டிருந்தார்.
அவர்களின் அருகில் சென்று நான்.., பேசி சரியான காசை வாங்கி கொடுத்தேன். பின் அந்த பாட்டியிடம் சென்று. ஏன் பாட்டி தனியாக சிரமம் படுகிறீர்கள். யாரையாவது துணைக்கு வைத்து கொள்ளலாமே என்று கேட்டேன்.
அதற்கு அந்த பாட்டி எனக்கு ஒரே ஒரு மகள் மட்டும் தான், அதுவும் அவளுக்கு மூளை வளர்ச்சி கிடையாது.., நான் தான் என் மகளை பார்த்துக் கொள்ள வேண்டும். திருமணம் ஆன இரண்டு வருடத்திலேயே என் கணவரும் இறந்து விட்டார். அன்று எனக்கு வயது 23 அன்று முதல் இன்று வரை நான் உழைத்து தான், என்னையும் என் மகளையும் பார்த்துக்கொள்கிறேன்.
ஏமாற்றுபவர்கள் உண்டு ஆனால் அதை எல்லாம் பார்த்தால், என்னால் வியாபாரம் நடத்த முடியாது.., அதுவும் சில தினங்களாக மழை வேறு பெய்து வருவதால், என்னால் சரக்கு எடுக்க கூட செல்ல முடியவில்லை.
அதனால் வந்த விலைக்கு நான் விற்று தான் ஆக வேண்டும். இந்த சமயத்தில் நான் குறைந்த விலைக்கு தர மாட்டேன் என்று சொன்னால், நாளை என் வீட்டில் உணவு இருக்காது. உறவினர்கள் கூட எங்களை பாரமாக தான் நினைப்பார்கள்.
எங்களை போன்றவர்களுக்கு உழைப்பு ஒன்று தான் எல்லாமே..
இந்த பாட்டியிடம் பேசிய பின் என் நினைவில் இருப்பது ஒன்று தான்.., இதுபோன்ற தெருவோர கடையில் இருப்பவர்களிடம் பேரம் பேசி வியாபாரம் செய்வதை விட.., சரியான விலைக்கு வாங்கி கொண்டு செல்லலாமே..