ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அசத்தலான 5 டிப்ஸ்..!!
நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, நாம் உண்ணும் உணவில் சிலவற்றை சேர்த்துக் கொண்டாலே போதும்.. ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய உணவுகள் பற்றி, இனி தினமும் உங்களுக்காக சில குறிப்புகள்..
கண்களுக்கு : பப்பாளி, பொன்னாங்கன்னி கீரை, தினை அரிசி இவற்றை வாரத்தில் ஒருமுறை எடுத்துக்கொண்டால். கண்பார்வை எளிதில் மங்காது.
உடல் தசைக்கு : கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து இருப்பதால், நீரழிவு நோய் ஏற்படுவதில் இருந்து உடலை பாதுகாக்கிறது. வெள்ளை அரிசியில் இருக்கும் சத்துக்களை விட கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்து இருக்கிறது. இது உடல் தசை வளர்ச்சிக்கு அதிக பங்கு வகிக்கிறது.
இதயநோய் : ஆலிவ் களில் இருக்கும் கொழுப்பு மோனோசாச்சுரேட்டர் எனும் நல்லவகையான கொழுப்பு என்பதால், உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து. இதயநோய் வராமல் தடுக்கிறது.
சரும பளபளப்பு : தினமும் ஒரு இளநீர் குடித்து வந்தால், உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துவதோடு. சருமத்தை பளபளப்பகாவும், முகப்பரு வராமலும் பார்த்துக்கொள்கிறது.
கறிவேப்பிலை : கறிவேப்பிலையில் கந்தகம், குளோரின், மாக்னீசியம், தாமிரம் போன்ற இரும்புச் சத்துக்கள் இருப்பதால், உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கிறது. மேலும் செரிமான சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது .
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
வெ.லோகேஸ்வரி