ஆம்லெட் செய்யும்போது இதை சேர்த்து பாருங்க..! சுவை அல்லும்..!
சப்பாத்தி மாவு பிசையும்போது அதில் கைப்பிடி அளவு கடலை மாவினை சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி நல்லா நிறமாகவும் மணமாகவும் இருக்கும்.
சப்பாத்தியின் மேல் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் கலந்த தேங்காய் பாலை ஊற்றி சிறிது நேரம் ஊறவைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேங்காய் எண்ணெயில் வரும் சிக்கு வாடை நீங்க ஐந்து மிளகை எண்ணெயில் போட்டு வைக்கலாம்.
ஆம்லெட் செய்ய முட்டை அடிக்கும்போது அதில் சிறிது பாலை ஊற்றி அடித்து செய்தால் ஆம்லெட் நல்லா சாஃப்டாக இருக்கும்.
ரவா தோசை செய்யும்போது அதில் கோதுமை மாவு சிறிது சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
பால் பாத்திரத்தில் சப்பாத்திக்கு மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும் பாத்திரமும் சுத்தமாகிவிடும்.
கீரையுடன் பச்சைமிளகாய் சேர்த்து சமைத்தாலும் ஒரு காய்ந்த மிளகாயும் சேர்த்தால் தான் சுவை கூடும்.
தோசைக்கல்லில் தோசை ஒட்டிக்கொண்டால், தோசைகரண்டியை நீரில் நனைத்து ஒட்டியவற்றை கல்லில் இருந்து எடுத்தால் ஈசியாக வரும்.
சமைக்க சில்வர் கரண்டியை பயன்படுத்துவதை தவிர்த்து மரக்கரண்டியை பயன்படுத்தினால் கையில் சூடு வராது பாத்திரத்திலும் கோடு விழாது.
உப்பு கலந்த நீரில் தக்காளியை சிறிது நேரம் போட்டுவைத்து பின் துடைத்து ஃபிரிஜ்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
சேனைக்கிழங்கை புளி நீரில் வேகவைத்தால் நாக்கு அரிக்காது.
