முதல் பிரசவத்தில் இருந்து இரண்டாவது பிரசவம் எப்படி மாறுபடுகிறது..?
முதல் பிரசவத்திற்கும் இரண்டாவது பிரசவத்திற்கு இடையே பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், சிக்கல்கள் மற்றும் ஒற்றுமைகள் என்னவென்று இந்த பதிவில் காணலாம்.
பெண்கள் முதல் பிரசவத்தை காட்டிலும் தங்களின் இரண்டாவது பிரசவத்தின் அறிகுறிகளை விரைவாக எதிர்கொள்கிறார்கள்.
இரண்டாவது பிரசவத்தில் பெண்கள் தங்களின் வயிற்றின் அளவில் உண்டாகும் மாற்றங்களை விரைவாக எதிர்கொள்கிறார்கள்.
பெண்கள் தங்களின் முதல் பிரசவத்தில் அனுபவித்ததை விட குறைவான அளவிலே குமட்டல், வாந்தி ஆகியவற்றை அனுபவிக்கிறார்கள்.
இரண்டாவது கர்ப்பத்தில் பெண்கள் தங்களின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் அசைவுகளை தங்களின் 16 வாரத்திலே விரைவாக உணர்கிறார்கள்.
குழந்தையின் அசைவுகள் 24 வாரம் வரை தென்படவில்லையெனில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
நீங்கள் முதல் பிரசவத்தில் அனுபவிக்காத பிரசவக்கால காய்ச்சலை இரண்டாவது பிரசவத்தில் காணலாம் அது இயல்பானது தான்.
பெண்கள் தங்களின் முதல் பிரசவத்தில் சுகப்பிரசவம் பெற்றிருந்தால் தங்களின் இரண்டாவது பிரசவத்திலும் சுகப்பிரசவம் அடைய வாய்ப்பு அதிகம்.
நீங்கள் முதல் பிரசவத்தில் அடைந்த அனுபவத்தை வைத்து நீங்களே இரண்டாவது பிரசவத்திலும் கைவைத்தியம் பார்த்துக் கொள்ள கூடாது, உங்களின் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துக் கொள்ள வேண்டும்.
