எண்ணெய் இல்லாத வெஜிடெபிள் புலாவ் ரெசிபி..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
தேவையான பொருட்கள்:
- அரிசி 2 கப்
- பீன்ஸ் 1/2 கப்
- கேரட் 2 நறுக்கியது
- காலிஃபிளவர் 1/2 கப் நறுக்கியது
- பால் 3/4 கப்
- மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
- கரம் மசாலா 1 ஸ்பூன்
- பிரியாணி இலை 1
- 3 கிராம்பு
- மிளகு 5
- பட்டை 1
- ஏலக்காய் 2
- ஜாதிக்காய் 1/2 ஸ்பூன்
- உப்பு தேவையானது
- முந்திரி 10
- கொத்தமல்லி இலை சிறிது
செய்முறை:
- முதலில் அரிசியை நன்றாக கழுவி பின் நீரில் அரை மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் பாதியளவு பால் சேர்த்து சூடுபடுத்த வேண்டும்.
- பின் அதில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, ஜாதிக்காய்பொடி ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
- மேலும் நறுக்கிய கேரட்,பீன்ஸ், காலிஃபிளவர், உப்பு, சர்க்கரை, மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும்.
- பின் ஊறவைத்த அரிசி மீதமுள்ள பால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும்.
- குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
- ஆவி போனதும் குக்கரை திறந்து நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான வெஜிடெபிள் புலாவ் தயார்.
- இதனுடன் தயிர் பச்சடி தயார் செய்து தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
- அவ்வளவுதான் சூப்பரான வெஜிடெபிள் புலாவ் தயார். இதை குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸியில் கட்டி கொடுக்கலாம்.
