சுவையான தேங்காய் பால் சாதம்..!
தேவையான பொருட்கள்:
- வெண்புழுங்கலரிசி 1 1/2 கப்
- தேங்காய் பால் 3 கப்
- பெரிய வெங்காயம் 1
- தக்காளி 1
- பிரிஞ்சி இலை 2
- இஞ்சி, பூண்டு விழுது 2 ஸ்பூன்
- பட்டை சிறு துண்டு
- கிராம்பு 4
- ஏலக்காய் 1
- அன்னாசி பூ 1
- பச்சை மிளகாய் 2
- சீரகம் 3/4 டீ ஸ்பூன்
- சோம்பு 1/2 டீ ஸ்பூன்
- உடைத்த முந்திரி 12
- கல் உப்பு தேவைக்கு
- எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
- நெய் 1 டேபிள் ஸ்பூன்
- முந்திரி, தேங்காய் துண்டுகள் அலங்கரிக்க
செய்முறை:
அரிசியை கழுவி ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயத்தை நீளமாக வெட்டிக் கொள்ளவும்.
தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
தேங்காய் துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்துக் கொண்டு அதனை வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய், எண்ணெய் சேர்த்து சூடானதும் சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, ஏலக்காய், பிரிஞ்சி இலை, முந்திரி, இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
அதில் ஊறவைத்த அரிசியை சேர்த்து தேங்காய் பால் ஊற்றி குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்கவும்.
குக்கரில் பிரஷர் போனதும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
அலங்கரிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வைத்து அலங்கரிக்கவும்.
அவ்வளவுதான் சுவையான தேங்காய் பால் சாதம் தயார்.