சாலையில் படுத்துகிடந்த நபர் மீது நடிகை ரேகா நாயர் கார் மோதி பலி…!
சென்னை ஜாஃபர்கான்பேட்டையில் உள்ள நடுரோட்டில் மஞ்சன் என்ற 55 வயதாகும் நபர் நேற்று மாலை மதுபோதையில் படுத்து இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அந்த வழியாக வந்த கார் ஒன்று மஞ்சன் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமணைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்தாக தெரிவித்தனர்.
பின்னர் தகவலறிந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கார் ஓட்டுநர் பாண்டி என்பவரை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டனர்.
விசாரணையில் அவர் அடையாறில் உள்ள நடிகை ரேகா நாயரின் கார் ஓட்டுநர் என்பதும், நடிகை ரேகா நாயரின் பெயரில் இந்த கார் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதனைதொடர்ந்து இந்த விபத்து அரங்கேறியபோது ரேகா நாயர் காரில் இருந்தாரா?என்பது குறித்து தகவல் எதுவும் தெரியாத்தால் இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்