சிம்பலான மீல்மேக்கர் சாதம்..!
தேவையான பொருட்கள்:
உதிராக வடித்த சாதம் – 2 கப்
மீல்மேக்கர் – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 3
கரம் மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 1
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு தேவையானது
எண்ணெய் – தேவையானது
தாளிக்க…
பட்டை – சிறிய துண்டு
இலவங்கம் – 2
எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் டம்ளர் சேர்த்து கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு உப்பு, எலுமிச்சை சாறு அதில் மீல்மேக்கர் போட்டு 15 நிமிடங்களுக்கு வைத்திருக்க வேண்டும்.
பின் நீரை பிழிந்து எடுத்து, எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
காய்ந்த மிளகாயை சிறிது நீரில் அரை மணி நேரத்திற்கு ஊறவைத்து அதனை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் பட்டை, இலவங்கம் சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
அதில் அரைத்த மிளகாய் விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் பொரித்த மீல்மேக்கர், கரம் மசாலாதூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
அனைத்து வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் வடித்து வைத்துள்ள சாதம் சேர்த்து கிளறவும்.
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் சிம்பலான மீல்மேக்கர் சாதம் தயார்.