மணமணக்கும் மஷ்ரூம் சுக்கா..!
தேவையான பொருட்கள்:
மஷ்ரூம் – 200 கிராம்
வெங்காயம் – 1
சோம்பு – 1 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
தனியா – 1 ஸ்பூன்
வர மிளகாய் – 3
பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
கறிவேப்பில்லை – 2 கொத்து
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை:
மஷ்ரூம்களை நீரில் சுத்தம் செய்துவிட்டு ஒரே அளவில் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
அடிப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய மஷ்ரூம்களை சேர்த்து கொதி வந்ததும் இறக்கி நீரை பிழிந்து எடுத்து வைக்கவும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து சூடானதும் சீரகம், மிளகு, சோம்பு, தனியா, பூண்டு, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொண்டு ஆறவைக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் ஆறவைத்தவற்றை சேர்த்து வெங்காயம் சிறிது நறுக்கி சேர்த்து விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு வாணல் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின் வேகவைத்த மஷ்ரூம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
அனைத்தும் நன்றாக எண்ணெய் பிரிந்து சுண்டி வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கிளறிவிட்டு இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் மணமணக்கும் மஷ்ரூம் சுக்கா தயார்.
