நாகர்கோவில் ஸ்பெஷல் புளியும் மீனும்..!
தேவையான பொருட்கள் :
- மத்தி / சால மீன் – 20
- சின்ன வெங்காயம் – 8
- புளி பேஸ்ட் – 2 – 3 டீஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- பூண்டு – 6 பல்
- இஞ்சி – 2 துண்டு
- காய்ந்த சிவப்பு மிளகாய் – 3
- கொத்தமல்லி விதைகள் – 1 டீஸ்பூன்
- பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
- மிளகு – 1 தேக்கரண்டி
- சீரகம் – 1 தேக்கரண்டி
- தேங்காய் எண்ணெய் – தேவைக்கேற்ப
- கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
- கல் உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
மீனை நன்றாக நீரில் அலசி சுத்தம் செய்த பின் மீனை கீறி எடுத்துக் கொள்ள வேண்டும்.
மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருஞ்சீரகம், கொத்தமல்லி விதை, சீரகம், மிளகு, மஞ்சள்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு மற்றும் புளி பேஸ்ட் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த மசாலாவை சுத்தம் செய்து வைத்துள்ள மீனில் கலந்து 10 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.
ஒரு வாணலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.
பின் மீனை சிறிது மசாலாவுடன் எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பக்கம் மீன் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப்போட்டு வேகவைக்க வேண்டும்.
மீன் முழுமையாக பொரிந்ததும் அதனை எடுத்து ஒரு தட்டில் வைத்து கறிவேப்பிலை தூவி விடவும்.
அவ்வளவுதான் சுவையான நாகர்கோவில் ஸ்பெஷல் புளியும் மீனும் தயார்.
