ஆட்டோ புக்கிங் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! போலீஸ் விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்..!!
சென்னையில் உள்ள ஆவடி என்ற பகுதியில் வீட்டை பூட்டிவிட்டு சாவியை மறைத்து வைத்துவிட்டு சென்ற பெண்ணுக்கு வீடு திரும்பியதும் அதிர்ச்சி காத்திருந்தது. இதேபோன்று சம்பவங்கள் எத்தனை நடக்கிறது..? என்பது தெரிந்து இருந்தாலும் “என்ன நடந்து விட போகுது” என்ற அலட்சியங்களால் நாம் நிறைய விஷயங்களை இழந்து விடுகிரோம்.
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் செந்தாமரை என்பவர் வசித்து வருகிறார். அங்கு அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்குச் செல்ல ஆன்லைன் மூலம் ஆட்டோவை புக் செய்திருந்தார்.
அப்போது செந்தாமரையை புக் செய்து இருந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் வந்திருந்தார். அவர் ஆட்டோவில் காத்திருந்த போது, செந்தாமரைக்கு போன் செய்து தான் வந்துவிட்டதாக கூறியுள்ளார். உடனே செந்தாமரை வெளியே வந்து பார்த்துவிட்டு, சிறுது நேரத்தில் நான் வந்துவிடுவதாக தெரிவித்துவிட்டு வீட்டுக்குள் சென்றார்.
பிறகு உள்ளே இருந்து வெளியே வந்த செந்தாமரை, வீட்டை பூட்டிவிட்டு சாவியை கதவு அருகே மறைத்து வைத்துவிட்டு வைத்துள்ளார். அதன்பிறகு செந்தாமரை தன்னுடைய உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு அங்கேயே தங்கிவிட்டார். மறுநாள் காலை வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறக்கப்பட்டுள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிலிருந்த ஒரு சவரன் நகையும், ரூபாய் 50 ஆயிரம் ரொக்கமும் திருடு போனது தெரியவந்தது.
இதனை அடுத்து ஆவடி காவல் துறையில் புகார் செய்ததை அடுத்து காவல்துறையினர் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது செந்தாமரையை அழைத்துச் செல்ல வந்த பெண் ஆட்டோ ஓட்டுநர், செந்தாமரையை இறக்கிவிட்டு விட்டு அதே வீட்டிற்கு திரும்பி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன
மேலு்ம அந்த ஆட்டோ ஓட்டுநர் , செந்தாமரை ஒளித்து வைத்திருந்த சாவியை எடுத்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவரை ஆவடி காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
– சத்யா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..