இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா..?
முட்டையை வேகவைக்கும்போது அதில் சிறிது கடலை எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்க சீக்கிரம் வெந்துவிடும்.
வெண்டைக்காய் குழம்பு வைக்கும்போது முதலில் அதனை நறுக்கி தனியாக எண்ணெயில் வதக்கி அதன் வழுவழுப்பு போனதும் குழம்பில் சேர்க்க குழம்பு ருசியாக இருக்கும்.
காலிபிளவர், முட்டைக்கோஸ், முள்ளங்கி வாங்கி சில நாட்கள் கழித்து சமைக்கும்போது அதில் ஒருவித வாடை அடிக்கும். அதனை தவிர்க்க சிறிது எலுமிச்சை சாறு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து சமைக்க மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
மீன் சமைத்த பாத்திரத்தில் அந்த வாடையை போக்க சிறிது சீயக்காய்த்தூளையும் புளியையும் சேர்த்து தேய்க்க வாடை போய்விடும்.
பாகற்காய் குழம்பு செய்யும்போது அதில் ஒரு கேரட்டை சேர்த்து குழம்பு வைத்தால் கசப்பு தன்மை இருக்காது.
இட்லி மாவு அரைக்கும்போது அதில் 2 வெண்டைக்காய் மற்றும் சிறிது விளக்கெண்ணெய் கலந்து அரைத்து பின் இட்லி சுடும்போது இட்லி மல்லி பூ போல மிருதுவாக இருக்கும்.
வெண்ணையை முட்டையில் கலக்கி ஆம்லெட் செய்யும்போது நல்லா ருசியாக இருக்கும்.
வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது அதன் பிசுபிசுப்பு போக அதில் சிறிது எலுமிச்சை சாறு அல்லது தயிர் கலந்து வதக்கினால் பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
பீட்ரூட்டை காயவைத்து அதனை பொடியாக்கி பின் அதனை கலருக்காக உணவில் சேர்த்து சமைக்க உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.
எந்த வகையான கீரைகளை சமைக்கும்போது தேங்காய் எண்ணெயில் தாளிக்க நல்லா வாசனையாக இருக்கும்.
மீன் குழம்பில் வெங்காயம் தக்காளியை வதக்கி வைப்பதை விட அரைத்து வைத்தால் மீன் குழம்பு சுவையாக இருக்கும்.
உடலில் ரத்தத்தின் அளவு குறைவாக இருந்தால் தினமும் ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர ரத்தம் அதிகரிக்கும்.
எந்த சட்னி செய்யும்போது அதனுடன் பெரிய வெங்காயத்துக்கு பதில் சின்ன வெங்காயம் சேர்த்து சமைக்க ருசியாக இருக்கும்.