ஜம்மு காஷ்மீர் அரசுக்கு அதிகாரம் இல்லாதது ஏன்..? ஆளுநர் கிரீஷ் சந்திர முர்மு கேள்வி..?
ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசத்தில் தற்போது சட்டசபைத் தேர்தல் நடந்து வருகிறது.. கடந்த 10 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் சட்டசபைத் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆட்சி அமைக்க போகும் யூனியன் பிரதேச மாநில அரசுக்கு கிடைத்த அதிகாரம் இல்லை என ஆளுநர் தெரவித்துள்ளார்..
ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட தேர்தலானது கடந்த செப்டம்பர் 18ம் தேதி நடைபெற்றது., இன்னும் இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால். கடந்த 2014ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபைத் தேர்தல் நடந்துள்ளது.
ஆனால், 2014இல் அமைந்த அரசுக்கும் இப்போது அமையப் போகும் அரசுக்கும் பல வேறுபாடுகள் இருப்பதால் இந்த அரசு ஆட்சி செய்ய என்ன அதிகாரம் உள்ளது. இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு என்னவென்று பல கேள்விகள் எழுந்துள்ளது
கடந்த 2019ம் ஆண்டு சிறப்பு அந்தஸ்தானது ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மற்றும் காஷ்மீர் மாநிலமானது இரண்டு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்பட்டது. அதில் சட்டமன்றத்தில் சாராத யூனியன் பிரதேசமாக லடாக் உள்ளது..
சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் இருக்கும் என்பதால் இந்த அரசியல் அமைப்பின் 3வது பிரிவில் தேவையான சட்டத் திருத்தமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
தமிழ்நாட்டில் பல யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக உள்ள இருக்கும் டெல்லி, புதுச்சேரி மற்றும் ஜம்முகாஷ்மீர் மாகாணத்தில் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக தற்போது ஜம்முகாஷ்மீர் விளங்குகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் அதிகாரங்களைப் போலவே காஷ்மீர் மாநிலத்திலும் பல . அரசியலமைப்பு சட்ட பிரிவுகளான 239A பிரிவு சட்டமானது இரண்டு மாநிலங்களுக்கும் ஒன்றாக பொருந்தும் படி கடந்த 2019ம் ஆண்டு மாநிலத்தின் அந்தஸ்த்தை உயர்த்தும் சட்டத்தை முன்வைத்தது. அதேசமயம் டெல்லியில் சில அரசியல் சட்டங்களில் மாற்று கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது..
காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து செயல்பட்டு வந்த வரையில் பாதுகாப்பு துறை, வெளியுறவு துறை மற்றும் தகவல் தொடர்பு துறைகளிலும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் இந்த சிறப்பு அந்தஸ்து செயல்படும் என்பது போல தெரிவித்திருந்தது..,
அதன் பின்னர் இந்தியாவின் அரசியல் அதிகாரம் காஷ்மீரிலும் செல்லுபடியாகும் என அறிவித்திருந்தது. ஆனால், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் இப்போது நாட்டின் பிற யூனியன் பிரதேசங்களில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் அனைத்து அதிகாரங்களும் காஷ்மீரிலும் செயல்படுத்தப் பட்டுள்ளது..
பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் கடந்த 2019ம் ஆண்டு காஷ்மீரில் மறுசீரமைப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.. இந்த சட்டம் மூலம் துணை ஆளுநருக்கும் ஒரு அதிகாரத்தைக் கொடுக்கிறது. அதே சமயம் இதன் பின் புதிதாக அமையபோகும் அரசுக்கு இந்த சிறப்பு அந்தஸ்து கொடுக்கபடாது என்பது குறிப்பிடத்தக்கது..
சட்ட ஒழுங்கு, போலீஸ் தவிர வேறு எந்த துறை சார்ந்த சட்டத்தையும் காஷ்மீர் சட்டசபையால் நிறைவேற்றிட முடியாது என்ற சட்டமும் பொது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து அம்மாநில அரசால் புதிய சட்டத்தை இயற்ற முடியாது என்ற அளவிற்கு அரசியல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது..
இந்திய அரசியலமைப்பு சட்டபடி இந்திய நாட்டின் மாநிலங்களில் மத்திய சட்டங்களுடன் முரண்படவில்லை என்றால் மாநில அரசுகளால் பொது பட்டியலின் கீழ் உள்ள துறைகள் மற்றும் அதுகுறித்த சட்டங்களை உருவாக்க முடியும். ஆனால், காஷ்மீருக்கு அதில் கூடுதல் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது காஷ்மீரில் எந்தவொரு நிதி மசோதா அல்லது திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்பு லெப்டினன்ட் கவர்னரின் பரிந்துரை தேவை என்று சட்டம் கூறுகிறது. அதாவது எந்த சட்டம் என்றாலும் ஆளுநரின் ஒப்புதல் தேவை என்ற சூழலை உருவாக்குகிறது. மேலும், ஆல் இந்தியா சர்வீஸ், ஊழல் விசாரணை முகமைகள் என அனைத்தும் கவர்னர் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இது ஆளுநருக்கு அதிகபட்ச அதிகாரங்களைத் தருவதாக இருக்கிறது. மாநில அரசின் அதிகாரத்தை வெகுவாக குறைக்கிறது. ஆனால், முன்பு மாநிலமாக இருந்த போது மாநில அரசுக்கே அதிகபட்ச அதிகாரம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..