ஹெல்தியான பேசரட்டு ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
பச்சை பயிறு 1 கப்
நெய் தேவையானது
சீரகம் 1/2 ஸ்பூன்
வெங்காயம் 3/4 கப்
பச்சை மிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
உப்பு தேவையானது
எண்ணெய் சிறிது
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பச்சை பயிறை அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த பச்சை பயிறை தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். கழுவும் நீர் சுத்தமாக வரும் வரை கழுவ வேண்டும்.
பின் இதில் குடிக்கும் நீர் ஊற்றி 6 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
6 மணி நேரம் கழித்து அந்த நீரில் கலைந்து வடிக்கட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் அதில் அரை ஸ்பூன் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின் இதில் முக்கால் கப் வெங்காயம் மற்றும் 2 பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பச்சை பயிறு, இஞ்சி, உப்பு, பச்சை மிளகாய், சீரகம் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் தடவி அரைத்த மாவில் ஒரு கரண்டி எடுத்து தோசை ஊற்றி சுற்றி நெய் சிறிது ஊற்றி வேகவைக்க வேண்டும்.
நன்றாக வெந்ததும் வதக்கிய வெங்காயத்தை தூவி வேகவைத்து எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் பேசரட்டு தயார். இதனுடன் காரமான சட்னி வைத்து சாப்பிடலாம் சூப்பராக இருக்கும்.