சுவையான முட்டை பிரியாணி மற்றும் தயிர் பச்சடி..!
தேவையான பொருட்கள்:
நெய் 3 ஸ்பூன்
பாஸ்மதி அரிசி 2 கப்
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
முட்டை 5 வேகவைத்தது
தக்காளி 1
மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
கரம் மசாலா 1 ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி 1/4 கப்
உப்பு தேவையானது
தயிர் 6 ஸ்பூன்
தண்ணீர்
பிரியாணி இலை 1
கிராம்பு 4
நட்சத்திர மொக்கு 1
சீரகம் 1/2 ஸ்பூன்
ஏலக்காய் 2
பட்டை 1
செய்முறை:
அரிசியை நீரில் நன்றாக சுத்தம் செய்து அரை மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
முட்டையை வேகவைத்து அதன் ஓட்டை உரித்து கத்தியால் சிறிது கீறி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி அதில் பிரியாணி இலை, கிராம்பு, நட்சத்திரமொக்கு, ஏலக்காய்,பட்டை ஆகியவற்றை சேர்த்து தாளித்து அதில் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்க வேண்டும்.
பின் இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு நறுக்கிய தக்காளி, புதினா, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் தயிர் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இதில் கரம் மசாலா சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஊறவைத்த அரிசி மற்றும் முட்டை சேர்த்து கலந்து குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.
ஒரு கிண்ணத்தில் 1 கப் தயிர், உப்பு, நறுக்கிய ஒரு வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து கலந்து விட வேண்டும்.
அவ்வளவுதான் சூடான முட்டை பிரியாணி மற்றும் தயிர் பச்சடி தயார்.