கார்ன் ப்ரைடு ரைஸ்..!
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி ஒரு கப்
ஸ்வீட் சோளம் ஒரு கிண்ணம் வேகவைத்தது
எண்ணெய் மூன்று ஸ்பூன்
பூண்டு 1 ஸ்பூன் நறுக்கியது
வெங்காயம் ஒன்று நறுக்கியது
பச்சை மிளகாய் 2 நறுக்கியது
பச்சை குடைமிளகாய் அரை கப் நறுக்கியது
சிவப்பு குடைமிளகாய் அரை கப் நறுக்கியது
உப்பு தேவையானது
மிளகுத்தூள் ஒரு ஸ்பூன்
சோயா சாஸ் 2 ஸ்பூன்
வினிகர் 2 ஸ்பூன்
வெங்காயத்தாள் சிறிது
கொத்தமல்லி இலை சிறிது
செய்முறை:
பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி அரை மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
பின் அரிசியை வேகவைத்து வடித்து ஆறவைக்க வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து அதில் மூன்று ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், நறுக்கிய பச்சை குடைமிளகாய் அரை கப், அரை கப் சிவப்பு குடைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
அனைத்தும் மென்மையாக வதங்கியதும் வேகவைத்த கார்ன் சேர்த்து கிளற வேண்டும்.
பின் தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், சோயா சாஸ் இரண்டு ஸ்பூன், வினிகர் இரண்டு ஸ்பூன் சேர்த்து கிளற வேண்டும்.
அதில் வேகவைத்த சாதம் சேர்த்து கிளற வேண்டும்.
பின் இதில் நறுக்கிய வெங்காயத்தாள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான கார்ன் ப்ரைடு ரைஸ் தயார்.
வீட்டில் இன்று இதை செய்து அசத்துங்க பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.