உக்ரைனுக்கு புறப்பட்டார் மோடி… 10 மணி நேர பயணம்..!
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு சென்று, அந்நாட்டு அதிபர்களுடன் நல்லுறவை வளர்த்து வருபவர் பிரதமர் நரேந்திர மோடி. அந்த வகையில், 3-வது முறை பதவியேற்ற பிறகும், இந்த கலாச்சாரத்தை அவர் பின்பற்றி வருகிறார்.
சமீபத்தில், போலந்து நாட்டுக்கு சென்ற பிரதமர், அங்குள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்து, உரையாற்றினார். பின்னர், அங்கு தனது அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்ட மோடி, தற்போது, அதிநவீன ரயிலில், உக்ரைன் நாட்டுக்கு சென்றுள்ளார்.
10 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த பயணத்தின் முடிவில், அங்கு சென்று சேர்ந்த பிரதமர் மோடி, தற்போது நடந்து வரும் போரை, சுமூகமாக முடிப்பதற்கு முன்னெடுப்புகளை பகிர்ந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உக்ரைன் நாடு சுதந்திரம் பெற்றதற்கு பிறகு, அந்நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்