பீர்கங்காய் இறால் குழம்பு..!
தேவையான பொருட்கள்:
பீர்கங்காய் சிறியது 3
ராஜ இறால் 12
வெங்காயம் ஒன்று
பச்சை மிளகாய் ஒன்று
தக்காளி அரை
மஞ்சள்தூள் கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
அரைத்த சோம்பு அரை ஸ்பூன்
பட்டை இரண்டு
கறிவேப்பிலை சிறிது
எண்ணெய் 1 ஸ்பூன்
தேங்காய் பால் 100 மிலி
உப்பு தேவையானது
தண்ணீர் தேவையானது
செய்முறை:
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பீர்கங்காயை சிறியதாக நறுக்க வேண்டும்.
சோம்பை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்க வேண்டும்.
அனைத்தும் வதங்கியதும் மஞ்சள்தூள் கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து கிளற வேண்டும்.
நறுக்கிய பீர்கங்காய் சேர்த்து வதக்க வேண்டும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து நீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
காய் நன்றாக வெந்ததும் அதில் சுத்தம் செய்த இறால் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் தேங்காய் பால், அரைத்த சோம்பு சேர்த்து கிளற வேண்டும்.
குழம்பு நன்றாக கொதித்து வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
இது அனைத்து உணவிற்கும் சேர்த்து சாப்பிட ரொம்ப சுவையாக இருக்கும், ட்ரைப் பண்ணி பாருங்க.