டெல்லி சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!! தலைவர்களை சந்தித்து பேச்சா..? வெளியாகவுள்ள முக்கிய அப்டேட்..?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம் சென்றுள்ளார். அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து ஆளுநரின் பதவி நீட்டிப்பு குறித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது தொடர்பான அரசின் அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படுமா என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது..
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லியில் தலைவர்களை சந்தித்து பேசுவதற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.. டெல்லி சென்றவுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசிவிட்டு. நாளை இரவு மீண்டும் சென்னை திரும்பவுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்..
கடந்த சில நாட்களுக்கு தமிழகத்தில் தலைமைச் செயலாளர்கள் மாற்றப்பட்ட நிலையில், புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டார்.. பதவி ஏற்ற பின் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.. அதனைத் தொடர்ந்து தற்போது ஆளுநர் டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலமானது கடந்த ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்துள்ள நிலையில்., இன்னும் அவர் பதவி விலகாமல் தமிழகத்தின் ஆளுநராக பதவியாற்றி கொண்டிருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது..
ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பிப்பார் ஆர்.என்.ரவியே பதவியில் இருப்பார் என பலரும் நினைத்துக் கொண்டு இருக்க., இதுவரை ஆளுநரின் பதவிகாலம் நீட்டிப்பு செய்யப்படவில்லை. அதே சமயம், தமிழ்நாட்டில் புதிய ஆளுநர் நியமனம் செய்யப்படவும் இல்லை.
இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்து நிகழ்வில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் புறக்கணிக்கப்போவதாக கூறி பின்னர் பங்கேற்றனர். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் புறக்கணிப்பதற்கான காரணம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிற்காக எந்த உதவியும் செய்யவில்லை என அவர்கள் தரப்பில் தெரிவித்திருந்தனர்..
இந்நிலையில் தான் ஆளுநர் ரவி டெல்லி பயணத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து பதவி நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..