தயிர் வடை சாப்பிட்டு இருக்கீங்களா..?
தேவையான பொருட்கள்:
வடை செய்ய:
உளுத்தம் பருப்பு 1 கப்
பாசிப் பருப்பு 1/2 கப்
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
சீரகத்தூள் 1 ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
தயிர் செய்ய:
தயிர் 1 கப்
சீரகத்தூள் 1ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
சர்க்கரை 1 ஸ்பூன்
உப்பு சிறிது
புளிச்சட்னி:
புளி கரைசல் 1 கப்
இஞ்சி பொடி 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
நாட்டு சர்க்கரை சிறிது
கொத்தமல்லி சட்னி:
கொத்தமல்லி இலைகள் சிறிது
மாங்காய்த்தூள் 1 ஸ்பூன்
பூண்டு 2
பச்சை மிளகாய் 2
உப்பு
செய்முறை:
முதலில் உளுத்தம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பை அலசிவிட்டு நீரில் ஊறவைக்க வேண்டும்.
இரண்டும் நன்றாக ஊறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனை நன்றாக பஞ்சு போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த மாவினை ஒரு அலகமான பாத்திரத்திற்கு மாற்றவும்.
பின் மாவில் பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, சீரகத்தூள் ஆகியவற்றை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவில் சிறு உருண்டைகளாக செய்து அதனை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் சூடான நீர் வைத்துக் கொண்டு பொரித்த வடைகளை அந்த நீரில் போட்டு சிறிது நேரம் சாப்டாகும் வரை வைத்திருக்க வேண்டும்.
ஒரு ஃபேனில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் சேர்த்து பொரிந்ததும் பெருங்காயத்தூள், இஞ்சி பொடி, மிளகாய்த்தூள் மற்றும் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும். கடைசியாக சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து இறக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலைகள், மாங்காய்த்தூள், பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் தயிர் சேர்த்து அதனை கட்டிகள் இல்லாதவாறு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். மேலும் அதில் சீரகத்தூள், மிளகாய்த்தூள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சிறிய கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொண்டு அதில் நீரில் ஊறவைத்த வடை போட்டு அதன் மேல் தயிர் கலவையை ஊற்றி கொள்ள வேண்டும்.
பின் அதன் மேல் புளிச்சட்னி மற்றும் கொத்தமல்லி சட்னி சேர்க்கவும். அதன் மேல் நறுக்கிய இஞ்சி, சீரகத்தூள் மற்றும் மாதுளை விதைகளை சேர்த்து பரிமாறலாம்.
அவ்வளவுதான் தயிர் வடை தயார்.