ஆமாஸ்ட்ராங் கொலை வழக்கு..!! முக்கிய குற்றவாளிக்கு நீதிபதி அதிரடி உத்தரவு..!!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் அவரது வீட்டின் முன் மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்யபட்டார்., அந்த வழக்கில் பெண்ணை பாலு உட்பட 27 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து அதில் பிரபல ரவுடி என்கவுண்டரில் சுடப்பட்டார்..
தற்போது இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் உட்பட பத்து பேரை காவலர்கள் கைது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்., அதில் சம்மந்தப்பட்டுள்ள 10 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது., அதற்கான உத்தரவை சென்னை காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார்..
இதுவரை கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடி, ஹரிகரன், சதீஷ்குமார், ஹரிஹரன் சிவா, பிரதீப், முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை, முகிலன், விஜயகுமார், விக்னேஷ் என்கிற அப்பு, முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியும் பிரபல தாதா நாகேந்திரன் மகனுமான அஸ்வத்தாமன், ராஜேஷ், செந்தில்குமார் மற்றும் கோபி ஆகிய 15 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களை சிறையில் அடைக்கவும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்…
இதுவரை 10 பேர் இக்கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 25 பேர் மீது குண்டாஸ் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. இன்னும் சில நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் 25 பேர் மீது குண்டாஸ் தடுப்பு சட்டம் போடப்பட்டிருந்தது..
இந்நிலையில், இந்த கொலைக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என கோடம்பாக்கம் விக்னேஷ்குமார், விஜயகுமார், திருவள்ளூர் நத்தமேடு காலனியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்த அந்த வழக்கு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது..
இந்த வழக்கை நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் விசாரணை செய்தார்.. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன், கைது செய்யப்பட்டவர்கள்.., மூன்று பேரும் வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தியதால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக கூறினார்..
மேலும் இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் இன்னும் குற்றங்கள் அதிகமாகுமே தவிர குறையாது எனவும் வழக்கறிஞர் தேவராஜன் தனது வாதத்தை முன் வைத்தார்…
கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டரிந்த நீதிபதி கார்த்திகேயன், “மனுதாரர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளதால் தற்போது ஜாமீன் வழங்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..