சுவையான வரகரிசி ப்ரைடு ரைஸ் ரெசிபி..!
வரகரிசி ப்ரைடு ரைஸில் நாம் நிறைய காய்கறிகளை சேர்த்துள்ளோம். இதில் சேர்த்திருக்கும் வரகரிசியும் உடலுக்கு ரொம்ப சக்தி நிறைந்தது.
தேவையான பொருட்கள்:
- 2 கப் வேக வைத்த வரகு அரிசி
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 2 ஸ்பூன் நறுக்கிய கேரட்
- 2 ஸ்பூன் நறுக்கிய பீன்ஸ்
- 2 ஸ்பூன் நறுக்கிய சிவப்பு குடைமிளகாய்
- 2 ஸ்பூன் நறுக்கிய பச்சை குடைமிளகாய்
- 2 ஸ்பூன் நறுக்கிய மஞ்சள் குடைமிளகாய்
- 2 ஸ்பூன் கார்ன்
- தேவையானஅளவு வெங்காயத் தாள்
- தேவையானஅளவு உப்பு
- 1/2 ஸ்பூன் மிளகு தூள்
செய்முறை:
வரகரிசியை நன்றாக நீரில் சுத்தம் செய்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
அந்த அரிசியில் ஒன்றுக்கு மூன்று என்ற அளவில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் சிறிது உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
பாத்திரத்தை மூடி 10 நிமிடங்களுக்கு வேகவைக்க வேண்டும்.
அப்படியே விட்டு விடாமல் அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி விட வேண்டும்.
பின் அடுப்பை அணைத்து அப்படியே மூடி வைக்க வேண்டும், ஐந்து நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் வரகரிசி சாதம் நன்றாக உதிரி உதிரியாக இருக்கும்.
ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் கேரட், பீன்ஸ், குடைமிளகாய், பெருங்காயத்தாள் மற்றும் கார்ன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
காய்கறிகள் நன்றாக வதங்கியதும் பின் வேகவைத்த வரகரிசி சாதம் சேர்த்து கிளறிவிட வேண்டும்.
பின் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.
அனைத்தும் நன்றாக கலந்ததும் அதில் இறுதியாக வெங்காயத்தாள் மற்றும் கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் வரகரிசி ப்ரைடு ரைஸ் தயார்.
