தமிழகத்திற்கு வரவுள்ள பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..!!
தமிழகத்திற்கு புதிதாக வரவுள்ள பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்…
4.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனை கூடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
அதன் பின்னர் 17கோடியே 04 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 4 சேமிப்பு கிடங்கு வளாகங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன் பின் 58 நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடங்களையும் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நுகர்பொருள் வாணிபக்கழக பணிக்காக தேர்வான 110 ஊழியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
அதனை தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பூங்காக்களை காணொளி காட்சி மூலம் பார்வையிட்டு., அதனையும் காணொளி மூலமே திறந்து வைத்தார்..
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார் பட்டியில் 30 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார்., அப்போது பூங்கா முழுவதும் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள மலர்கள்., மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்காக கட்டப்பட்ட பூங்காக்களை பார்வையிட்டார்.. அதனை தொடர்ந்து 29 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேலம் மாவட்டம் கருப்பூர் கிராமத்தில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார்.,
இதில்., பொதுபணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு., பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி., கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..