பாரத் என பெயர் மாற்றம் செய்யும் போக்கு அய்யோக்கியதனமானது என வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரை வலையங்குளம் அருகே உள்ள கருப்பசாமி கோவில் திடலில் மதிமுக சார்பில் அண்ணாவின் 115 ஆவது ஆண்டு விழா சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டை ஆய்வு செய்த பின்னர் மாநாடு திடலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்:
சங்கமலர்த்து சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த மாமதுரையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் செப்டம்பர் 15ல் மாநாடு நடைபெற உள்ளது மாநாட்டின் சிறப்புகளை இந்த மாநாட்டின் பாடுபட்டவர்களை பற்றி தான் குறிப்பிட முடியும் நாட்டில் பல்வேறு கொலைகள் கற்பழிப்புகள் குற்றங்கள் நடைபெறுகிறது திராவிட இயக்கத்தின் ஆணிவேறையே அகற்ற சதி மத்தியில் ஆளும் அரசும் அதனை வழி நடத்தும் மொழி சர்வாதிகாரம் மோடியும் வழி நடத்துகிறார்கள் நடைபெறுகிறது
திராவிட இயக்கத்தின் போர்வால் தளபதி ஸ்டாலின் அவர்கள் கட்சியையும் திராவிட மாடல் ஆட்சியையும் சிறப்பாக இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வண்ணம் நடத்தி வருகின்றார். மும்பையில் நடைபெறும் இந்திய மாநாட்டில் நானும் தளபதி ஸ்டாலின் உடன் பங்கேற்றேன் அங்குள்ள தலைவர்கள் ஸ்டாலினை பெரியளவு வரவேற்கிறார்கள் அது நமக்கு மிகப்பெரிய பெருமையாக உள்ளது
ஒன்றிய அரசின் சர்வாதிகாரப் போக்கையும் எதோ செய்தியாரத்தையும் முறியடிக்கும் வண்ணம் இந்தியா என்னும் கூட்டணியை ஏற்படுத்தி உள்ளோம்
இந்தியா என்பது ஒரு நாட்டினுடைய பெயரா என்பது அல்ல ஏனென்றால் 300 வருடங்களுக்கு முன்பு இந்தியா என்ற ஒரு நாடு இருந்ததில்லை பிரிட்டிஷ்காரர்களின் இலத்தியும் துப்பாக்கியும் கொண்டு உருவாக்கியது தான் இந்தியா. இந்தியா என்று அனைத்துக் கட்சி கூட்டணி உருவாகி அதன் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா முழுமைக்கும் வெற்றி பெறுவோம் இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்போம் வட மாநிலங்களிலும் பிற மாநிலங்களிலும் மாபெரும் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்
தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக தளபதி ஸ்டாலின் நிறைவேற்றிவிட்டார். முத்தமிழ் அறிஞர் அண்ணாவின் வழித்தோன்றல் தளபதி ஸ்டாலின் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களிலும் பாண்டிச்சேரி உட்பட 40 இடங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவோம்
தேர்தல் வாக்குறுதி முக்கியமாக நீட் தேர்வு ரத்து செயல்படாத குறித்த கேள்விக்கு
நீட் தேர்வு ரத்து குறித்து மத்திய அரசு பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று முரட்டு பிடிவாதம் மூக்குல தனமும் செய்கிறது இதனால் தான் நீட் தேர்வு ரத்து செயல்படுத்த முடியவில்லை
நீட் தேர்வு ரத்து செய்ய அதிமுகவுடன் இணைந்து போராட உதயநிதி அழைப்பு கொடுத்தது பற்றி கேள்விக்கு
உதயநிதி அப்படி கூறியிருக்க மாட்டார் அதிமுகவுடன் இணைந்து ஒருபோதும் செயல்பட அழைத்திருக்கவும் மாட்டார்
பாரத் என்ற பெயர் மாற்றம் குறித்த கேள்விக்கு
இதைவிட அயோக்கிய தினம் வேறு எங்கு இருக்கிறது பாரத் என்று கூற பாரதம் எங்கே இருக்கிறது? பாரதிய ஜனதா கட்சி சனாதனத்தை நிறைவேற்ற வர்ணாசிரமக் கொள்கையை நிறைவேற்றவும் தான் அவர்கள் முயற்சிக்கிறார்கள்
தர்மத்தின் மூலம் மதத்தையும் ஜாதியையும் ஜாதிய பாகுபாடுகளையும் உருவாக்கி தமிழகம் மற்றும் இந்தியவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் இதை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது
திமுக அரசு ஜாதிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என அண்ணாமலையை கூறிய கருத்திற்கு
இது முற்றிலும் தவறானது திமுக அரசு அன்றைய கால கட்ட த்தில் உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒடுக்கப்பட்டவரை நியமித்து அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்
விஸ்வகர்மா யோஜனா திட்டம் குறித்த கேள்விக்கு
விஸ்வகர்மா யோஜனை திட்டம் மூலம் வர்ணாசிரம கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் கொல்லன் மகன் இரும்பு வேலைகளை செய்வான் மட்பாண்டம் வேலைகளை செய்பவர் மட்பாண்ட விலைகளை செய்வார் என்பது போன்ற வர்ணாசிரமான கொள்கைகளை உருவாக்க வழி வகுக்கும் இதனை மறுமலர்ச்சி திமுக உறுதியாக எதிர்க்கிறது
காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடகா நீர் திறக்க மறுப்பது குறித்த கேள்வியில்
கர்நாடகம் தொடர்ந்து பிடிவாத போக்கினை கடைப்பிடிக்கிறது இதற்கு உச்ச நீதிமன்றம் தான் சரியான தீர்வு சொல்ல வேண்டும்
சிஏஜி ஊழல் குறித்த கேள்விக்கு
மத்திய அரசு மிகப் பெரிய ஊழல் புரிந்துள்ளது. ஊழலுக்கு ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி என்று பாஜக கூற முடியாத நிலை உள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார் மேலும் மாநாட்டின் இறுதியில் தான் முக்கிய அறிவிப்பினை வெளியிட உள்ளதாகவும் மூன்று வருடங்களுக்குப் பின் பொதுக்கூட்ட மேடையில் பேச உள்ளதாகவும் அன்று முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிக்க: உயிரோடு இருக்கும் எல்.டி.டி.இ தலைவரின் மகள்… வெளியான அதிர்ச்சி வீடியோ…!