இனிமே ஆவின் ப்ரொடக்ட் வாங்கணும்னா.. தங்க மாளிகைக்கு தான் போகணும் போல..!!
ஆவின் பால் விலை உயர்வு அதிகரித்ததை தொடர்ந்து.., ஆவின் நெய் ஒரு கிலோ 70 ரூபாய் அதிகரித்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிற ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு 40 லட்சம் பால் லிட்டருக்கு கொள்முதல் செய்து அதை 35 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்து வருகிறது.
பால் மட்டுமின்றி நெய், தயிர், வெண்ணெய், பாதாம் பவுடர், குல்பி ஐஸ், பால் பவுடர், ஐஸ்கிரீம், மைசூர்பாக்கு போன்ற இதர பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்கிறது. கடந்த 2 வருடமாக ஆவின் பொருட்கள் விலை உயராமல் இருந்துள்ளது.., தற்போது அதிரடியாக உயர்ந்துள்ளது.
ஒரு லிட்டர் நெய் 580 ரூபாய் லிருந்து, 630 ரூபாயாக அதிகரித்துள்ளது,
5 லிட்டர் நெய் 2,900 ரூபாய் லி ருந்து, 3,250 ரூபாயாக அதிகரித்துள்ளது,
500 மி.லி நெய் 290 ரூபாய் லிருந்து 315 ரூபாயாக அதிகரித்துள்ளது,
ஆவின் நெய் 200 மி.லி 130 ரூபாயிலிருந்து 145 ரூபாய்க்கும்,
100 மி.லி நெய் 70 ரூபாய்ல் இருந்து 75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆவின் நெய்யை போல ஆவின் வெண்ணெய்யின் விலையும் அதிர்க்கரித்துள்ளது, 500 கிராம் சமையல் வெண்ணெய் 15 ரூபாய் உயர்த்தப்பட்டு 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..