கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு முதற் கட்டமாக வேலூர் மாவட்டத்திற்கு ஏ.டி.எம் கார்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகின. இதில் தகுதியுள்ளவர்களாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த திட்டம் வருகிற 15ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று துவங்கிறது. விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு வரும் 18ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும்.
இந்த நிலையில் உரிமை தொகையை பெறுவதற்கான பிரத்யேக ஏடிஎம் கார்டுகள் தயாராகி வருகிறது. முதற்கட்டமாக வேலூர் மாவட்டத்திற்கு 8000 ஏடிஎம் கார்டுகள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கார்டுகள் சரிபார்ப்புக்கு பின், ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் தொடங்கி வைத்த பின்னர் குடும்ப தலைவிகளுக்கு வங்கி கணக்கில் ரூ. 1000 செலுத்தப்படும் என்றும் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் பிரத்யேகமாக வழங்கப்பட்ட ஏடிஎம் கார்டுகள் மூலம் அந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க:
உங்களுக்கா வந்துச்சா 1ரூபாய்..? அப்போ மகளிர் உரிமைத் தொகை கன்பார்ம்..!