அமித்ஷா மற்றும் ஜெ.பி.நட்டாவை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்கிறார்.
நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளன. தேசிய அளவில் பாஜவுக்கு எதிராக எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தியா என்ற வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதனால் இப்போதிருந்தே தேர்தல் குறித்த பரபரப்பு இந்தியா முழுவதும் தொற்றிக் கொண்டுள்ளது.
மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்து வருகிறது. இந்த சமயத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்கிறர், அங்கு, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்க உள்ளார். அவர்களுடனான இந்திய சந்திப்பின் போது, எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் அதிமுக- பாஜ கூட்டணி குறித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிக்க: அம்பேத்கரை அவமதித்து சாதிய வன்மத்தைத் தூண்டிய ஆன்மிகவாதி… வலுத்த கண்டனத்தால் அதிரடியாக கைது..!