Indian jets were shot down
இந்தியா – பாகிஸ்தான் மோதலில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹான் முதன்முறையாக இன்று (மே 31) ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த மாதம் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக, கடந்த மே-7ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் மற்றும் முப்படைகள் தாக்குதல் நடத்தின. இதில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானிலுள்ள 9 பயங்கரவாத முகாம்கள் முழுமையாக தாக்கி அழிக்கப்பட்டன.
இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதன் விமானப் படை தளத்தையும் தாக்கியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்தது. எனினும் இந்திய விமானப் படையின் 6 விமானங்களை பாகிஸ்தான் தாக்கியது என அந்நாட்டின் பிரதமர் கூறியதை இந்திய ராணுவம் தொடர்ந்து மறுத்து வந்தது. Indian jets were shot down
இதற்கிடையே பாகிஸ்தான் உடனான போரில் இந்தியாவின் இழப்புக் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வந்தது. Indian jets were shot down
இந்நிலையில் சிங்கப்பூர் சென்றுள்ள இந்திய பாதுகாப்பு படைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் செளகான் ப்ளூம்பெர்க் டிவிக்கு நேற்று பேட்டி அளித்துள்ளார்.
அப்போது, ’பாகிஸ்தானுடனான ராணுவ மோதலில் இந்தியா தனது போர் ஜெட் விமானங்களை இழந்ததா?’ என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு.
அவர், ”போரின் ஆரம்பக்கட்ட மோதலில் இந்திய ராணுவம் தனது அனைத்து ஜெட் விமானங்களையும் பறக்கவிட்டு, பாகிஸ்தானின் எதிர் தாக்குதல் நடைபெறும் இடங்களை உறுதி செய்தது.
மேலும் இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதற்கான சரியான காரணங்களை கண்டறிந்து, அதனை சரி செய்து இரு தினங்களுக்குப் பிறகு பாகிஸ்தானின் இலக்குகள் மீது வெற்றிகரமாக துல்லிய தாக்குதல் நடத்தினோம். இங்கு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதை விட, அவை ஏன் சுட்டுவீழ்த்தப்பட்டன என்பதுதான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
மேலும், எத்தனை இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதை கூற மறுத்த அவர், 6 இந்திய விமானங்கள் அழிக்கப்பட்டன என்ற பாகிஸ்தான் ராணுவம் கூறியதை உறுதியாக மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.