அம்பேத்கர், வள்ளுவர் ஆகியோரை இழிவுபடுத்திப் பேசிய ஆன்மிகப் பேச்சாளர் RBVS மணியன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில தலைவரான RBVS மணியன் பல இந்துத்துவ அமைப்புகளில் முக்கியப் பதவிகளில் இருந்திருக்கிறார். தற்போது இந்துத்துவா குறித்த பேச்சுகள் காரணமாக இணையதளத்தில் பிரபலமடைந்துள்ளார். இந்த நிலையில் RBVS மணியன் பேச்சு கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சாதி வெறியைத் தூண்டும் வகையில் பேசியிருக்கும் அவர், அம்பேத்கர்தான் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதினார் என்று பலரும் சொல்லிவருகிறார்கள் என்றும் ஆனால் அவர் தன்னுடைய மூளையில் இருந்து அரசியல் சாசனத்தை எழுதி வைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
TN #RSS leader RBVS Manian’s casteist speech about the architect of the Indian Constitution, Babasaheb Dr B.R.Ambedkar
This filthy bigot & clown should be arrested immediately… pic.twitter.com/eMrAnAuJLB
— Gopinathan Vijayaraman (@gopinathvijay91) September 12, 2023
//x.com/gopinathvijay91/status/1701594923240472982?s=20
இதேபோல திருவள்ளுவர், திருக்குறள் குறித்தும் பேசியிருக்கும் மணியன், திருவள்ளுவர் என்று ஒரு இருந்ததே இல்லை எனவும், அவர் திருக்குறளை எழுதினார் என்பது நல்ல கற்பனை எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு வாதிகள் இவரை கைது செய்ய வலியுறுத்தினர்.
இதனையடுத்து சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் இன்று காலை ஆர்பிவிஎஸ் மணியன் கைது செய்யப்பட்டார். அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிக்க:
உயிரோடு இருக்கும் எல்.டி.டி.இ தலைவர் பிராபகரின் மகள்… வெளியான அதிர்ச்சி வீடியோ…!