குழந்தைககளுக்கு மலசிக்கல் ஏற்படாமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க..!! குறிப்பு-1
குழந்தை வளர்ப்பு என்பது, பெற்றோர்களுக்கு மிகவும் சவால் நிறைந்த ஒன்று.., சில தவறான உணவுமுறைகள் குழந்தைகளுக்கு மலசிக்கல் பிரச்சனை ஏற்படுத்தும். எனவே இந்த வகையான உணவுகளையும் குழந்தைக்கு கொடுத்து வந்தால் மலசிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
குழந்தைகளுக்கு குடல் சீராக இயங்க மற்றும் என்றும் சீராக இருக்க நார்ச்சத்து மிக அவசியம்.
பேரீச்சம்பழம் : மலசிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட பேரீச்சம்பழம், ப்ளம்ஸ் மற்றும் ஆப்பிள் போன்றவற்றை தோல் நீக்கி கொடுக்க வேண்டும். ஆறுமாதம் ஆன குழந்தைக்கு நன்கு மசித்து கொடுக்கலாம்.
தண்ணீர் : தண்ணீர் எந்த அளவிற்கு குழந்தைகள் குடிக்கிறார்களோ அந்த அளவிற்கு நோய் தொற்றில் இருந்து விடுபடுவார்கள், ஆறுமாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும்.
பழங்கள் : தினமும் ஒரு ஸ்ட்ராபெர்ரி, மாம்பழம், கிவி மற்றும் திராட்சை, பிச் பழங்களை சாப்பிடவோ அல்லது ஜூஸ் ஆகவோ கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு நன்கு மசித்து கொடுக்கவேண்டும்.
காய்கறி : நன்கு வேக வைத்த காலிஃப்ளவர், முட்டை கோஸ், பட்டாணி மற்றும் பூசணிக்காய் உணவில் சேர்த்துக் கொடுக்கலாம். இது வெயில் காலத்திற்கு ஏற்றவையும் கூட.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..