குழந்தையின் அதிக சிந்தனை மூளையை பாதிக்குமா..?
குழந்தைகள் எந்த அளவிற்கு குறும்பு செய்கிறார்களோ, அதே அளவிற்கு எதையாவது ஒன்றை சிந்தித்து கொண்டே இருப்பார்கள்.
அந்த சிந்தனை, படிப்பு, விளையாட்டு, கற்பனை என பல இருக்கும். இந்த அதிக சிந்தனை அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும், அல்லது அவர்களின் வாழ்க்கைக்கு வழிவகுக்குமா என்பது பற்றி பார்க்கலாம்.
குழந்தைகள் கண்களால் பார்க்கும் அனைத்தையும் மூளைக்கு கொண்டுசென்று சிந்தனை செய்வார்கள், இந்த சிந்தனை அவர்களுக்கு நன்மை கொடுக்கும்.
ஒரு குழந்தை எப்பொழுதும் படிப்பை பற்றி சிந்திக்கிறது என்றால், படிப்பில் அதிக ஆர்வம் கூடும். விளையாட்டில் அதிக சிந்தனை செய்கிறது என்றால் அதிகம் விளையாட ஆர்வம் தூண்டும். இதனால் என்றும் குழந்தை ஆக்டிவாகவே இருக்கும்.
குழந்தைகள் வருங்காலத்தில் என்னவாக விரும்புகிறார்களோ அதை குழந்தை பருவத்தில் இருந்து கனவாக ஆரம்பிக்க தொடங்கி விடுவார்கள். அந்த சிந்தனையில் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை செய்ய விரும்புவார்கள், அந்த சமயத்தில் அதை செய்யவிடாமல் யாரவது தடுத்தால், குழந்தையின் மனதை அதிகம் பாதிக்கும்.
அதாவது ஒரு குழந்தைக்கு ஓவியம் வரையும் திறமை இருக்கிறது, அவள் அதை கற்பனையில் கண்ட ஓவியத்தை வரைய நினைக்கும் பொழுது, வரைக்கூடாது என்று சொல்லுவது, அல்லது படிப்பு தான் முக்கியம் என்று சொல்லி வேறு செயலில் ஈடுபட வைத்தால்.
குழந்தைக்கு அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்தும், அதுவே நாளாக, குழந்தையின் மூளையையும் அதிகம் பாதிக்கும். எனவே பெற்றோர்களின் மனதை புரிந்துகொண்டு பெற்றோர்கள் நடந்துக்கொள்ள வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..