நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த சூப் ட்ரை பண்ணுங்க..!!
உங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கனுமா வீட்டில் முருங்கைக்கீரை இருந்தால், அதை வைத்து இந்த மாதிரி சூப் செய்யுங்கள்
இந்த பதிவில் முருங்கைக்கீரை சூப் செய்வதற்கு தேவையான பொருட்கள் பார்க்கலாம் வாங்க;
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
பூண்டு – 7- 8
இஞ்சி – சிறிய துண்டு
சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
முருங்கைக்கீரை – 2 கைப்பிடி
செய்முறை;
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
சிறிது நேரம் கழித்து அதில் தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பின்பு அதில் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, பின் அதில் மிளகுத் தூள், சீரகத் தூள் சேர்த்து ஒருமுறை கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் சூப்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
இறுதியாக அதில் முருங்கைக்கீரையை 2 கைப்பிடி சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான முருங்கைக்கீரை சூப் தயார். நீங்கள் செய்து பார்த்து எப்படி இருக்கு என்று பதிவிடுங்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..