கோவக்காய் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை..!
இனிப்பு பலகாரம் செய்யும்போது சர்க்கரைக்கு பதிலாக தேன் அல்லது வெல்லம் சேர்த்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
நூடுல்சை வேகவைத்து பின் குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைத்திருந்து சமைத்தால் உதிரி உதிரியாக நூடுல்ஸ் வரும்.
சில நேரங்களில் சாதம் சிறிது மங்கலாக இருக்கும் அதனை தவிர்க்க சில சொட்டுகள் எலுமிச்சை சாறு சேர்த்து சமைத்தால் வெண்மையாக இருக்கும்.
இடியாப்பத்திற்கு மாவு பிசையும்போது சூடான நீர் சேர்த்து பிசைந்தால் இடியாப்பம் மென்மையாக வரும்.
பகோடா, வடை ஆகியவை செய்யும்போது ஒரு கரண்டி ரவை சேர்த்து செய்தால் நல்லா மொறு மொறுவென இருக்கும்.
கோவக்காய் வாங்கும்போது அது முழுமையாக பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். சிறிது சிவப்பாக மாறினாலும் வாங்காதீர்கள்.
புளி சீசனில் வருடத்திற்கு ஒரு முறை சேமிக்கும்போது புளியை ஜாடி, பானைகளில் சிறிது உப்பு போட்டு பின் புளியை சேமிக்க அது பூச்சு பிடிக்காது.
வாழைக்காய் சாப்பிடும்போது வாயு தொல்லை வராமல் இருக்க அதில் சீரகம், மிளகு ஆகியவை அதிகமாக சேர்த்து சமைக்க வேண்டும்.
வடைக்கு உளுந்து ஊறவைக்கும்போது சிறிது பச்சரிசியும் சேர்த்து ஊறவைத்து அரைத்து வடை சுட்டால் வடை அதிகமாக எண்ணெய் குடிக்காது.