அரிசி இல்லாத கொழுக்கட்டை..!
தேவையான பொருட்கள்:
ரவா 1 கப் வறுத்தது
எண்ணெய் தேவையானது
கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
உளுந்து 1/2 ஸ்பூன்
கடுகு அரை ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
பச்சை மிளகாய் 1 நறுக்கியது
வெங்காயம் 1 நறுக்கியது
வேகவைத்த பச்சைபயிறு 2 ஸ்பூன்
கேரட் 1 துருவியது
தேங்காய் 1/2 கப்
தண்ணீர் 2 கப்
உப்பு தேவையானது
கொத்தமல்லி இலை சிறிது
செய்முறை:
ஒரு ஃபேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம் போட்டு தாளித்து கொள்ளவும்.
பின் கறிவேப்பிலை,பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் வேகவைத்த பச்சை பயிறு, கேரட், தேங்காய், உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் வறுத்த ரவை சேர்த்து கலந்து கிளறவும்.
பின் ரவை வெந்து கெட்டியாக வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
இதனை நன்றாக ஆறவைத்து பின் கொழுக்கட்டை வடிவில் பிடித்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் சூப்பரான டேஸ்டில் கொழுக்கட்டை தயார்.