குளிர்சாதன பெட்டியில் திடீர் மின்கசிவு.. அருகில் உறங்கிய நபருக்கு நேர்ந்த சோகம்..!
சென்னை கே.கே நகர் கிழக்கு வன்னியர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். வெல்டிங் வேலை செய்து வந்த இவர் கலைப்பாக உள்ளதாக தனது வீட்டில் உள்ள குளிர்சாதனப்பெட்டி அருகே நேற்று முன்தினம் வெங்கடேசன் படுத்து உறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாரதவிதமாக குளிர்சாதன பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அறியாத வெங்கடேசன் திரும்பி படுக்க முயன்றபோது அவரது கை குளிர்சாதன பெட்டியின் மீது உரசியத்தில் மின்சாரம் தாக்கி வெங்கடேசன் அலறி துடித்துள்ளார்.
இவரது அலரல் சத்தத்தை கேட்டு பதறி ஓடி வந்த மனைவி மின்சாரம் தாக்கி மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
மருத்துவமனையில் அவருக்கு திவீர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், தகவலறிந்த கேகே நகர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்