இன்னிக்கு சுவையான தாளிச்ச சாதம் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
உதிரியாக வடித்து ஆறவைத்த சாதம் – 2 கப்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன்
கடலை பருப்பு – கால் ஸ்பூன்
மிளகு – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
சோம்பு – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
வர மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கால் ஸ்பூன், உளுந்து கால் ஸ்பூன், கடலைபருப்பு கால் ஸ்பூன் சேர்த்து பொரித்துக் கொள்ள வேண்டும்.
பின் கறிவேப்பிலை இரண்டு கொத்து, வரமிளகாய் இரண்டு கிள்ளி சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு கால் ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் மிளகு, கால் ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அனைத்தும் நன்றாக பொரிந்ததும் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் மஞ்சள்தூள் அரை ஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
பின் ஆறவைத்த சாதம் இரண்டு கப் சேர்த்து கிளற வேண்டும்.
அவ்வளவுதான சுவையான