ஹெல்தியான உப்பு மணி கொழுக்கட்டை..!
உப்பு மணி கொழுக்கட்டையானது பண்டிகை நாட்களில் மட்டும் செய்வது அல்ல, காலை உணவாக வீட்டில் எப்போது வேண்டுமானாலும் ஹெல்தியாக செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு 1/2 கப்
தண்ணீர் 1/2 கப்
உப்பு தேவையானது
எண்ணெய் 1 ஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
ஓமம் 1 ஸ்பூன்
எண்ணெய் 1 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
உளுந்து 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 1
பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு ஃபேனில் தண்ணீர் அரை கப் ஊற்றி அதில் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நீர் கொதிக்கும் சமையத்தில் அரிசி மாவினை சேர்த்து நன்றாக கட்டிகள் இல்லாதவாறு பிசைந்துக் கொள்ள வேண்டும்.
மாவில் தண்ணீர் சுண்டியதும் அடுப்பை அணைத்து ஆறவைக்கவும்.
பின் இதில் பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, ஓமம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக சாஃப்டாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.
கைகளில் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இட்லி தட்டில் இந்த உருண்டைகளை வைத்து பாத்திரத்தை மூடி 10 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும்.
பின் இட்லி தட்டில் இருந்து எடுத்து உருண்டைகளை நன்றாக ஆறவைக்கவும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து பின் பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி கறிவேப்பிலை, தேங்காய் துருவல் மற்றும் வேகவைத்த கொழுக்கட்டை ஆகிவற்றை சேர்த்து பிரட்டி எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் உப்பு மணி கொழுக்கட்டை தயார்.