ஆந்திரா பெப்பர் சிக்கன் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
ஊறவைக்க:
சிக்கன் 500 கிராம் நறுக்கியது
கிராம்பு 5
இஞ்சி 2 துண்டு
எலுமிச்சை 1
மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
பெப்பர் சிக்கன் செய்ய:
வெங்காயம் 2 நறுக்கியது
கிராம்பு 4
இஞ்சி 1
பச்சை மிளகாய் 2
உப்பு
கறிவேப்பிலை சிறிது
மிளகுத்தூள் 2 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் 2 ஸ்பூன்
எண்ணெய் 4 ஸ்பூன்
கொத்தமல்லி இலை சிறிது
செய்முறை:
முதலில் சிக்கனை நன்றாக நீரில் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதில் மஞ்சள்தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு ஆகிவற்றை சேர்த்து நன்றாக கலந்து மூடி ஃபிரிஜ்ஜில் பாத்திரத்தை அரை மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி நறுக்க்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின் இதில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்க வேண்டும்.
பிறகு மிளகுத்தூள், மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
சிறிது தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை மூடி சிக்கன் நன்றாக வேகும் வரை வேகவைக்க வேண்டும்.
பின் நீர் சுண்டியதும் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து கலந்து கிளறி விட வேண்டும்.
அவ்வளவுதான் ஆந்திரா பெப்பர் சிக்கன் தயார். இதனுடன் சூடான சாதம் சேர்த்து சாப்பிடலாம்.
