இனி பரோட்டா வீட்டிலே செய்யலாம்..!
பரோட்டா என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாகும் ஆனால் இதனை அளவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
பரோட்டா என்பது மைதா மாவினால் செய்யப்பட்ட பல அடுக்குகள் நிறைந்த உணவாகும். இதனை செய்வது என்பது பலருக்கும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் இப்போ நான் சொல்வது போல நீங்கள் இனி வீட்டிலே செய்து ருசிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
- மைதா மாவு
- உப்பு
- எண்ணெய்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு நன்றாக 15 நிமிடங்களுக்கு பிசைய வேண்டும். இதனை நன்றாக இழுத்து இழுத்து பிசைந்துக் கொள்ள வேண்டும்.
- இதில் சிறிது எண்ணெய் ஊற்றி மாவினை நன்றாக ஐந்து நிமிடங்களுக்கு பிசைய வேண்டும்.
- மாவு நன்றாக பிசைந்ததும் ஒரு துணி போட்டு மூன்று மணி நேரத்திற்கு மூடி வைக்க வேண்டும்.
- பின் பிசைந்து வைத்துள்ள மாவினை எடுத்து உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு தட்டின் பின் எண்ணெய் தடவி அதில் ஒரு உருண்டையை வைத்து வட்டமாக அழுத்தி பின் சுற்றி சுற்றி பரோட்டா வடிவில் செய்து கொள்ள வேண்டும்.
- பின் அப்பாத்தி கல்லில் அதனை வைத்து சற்று தடிமனாக தேய்த்து கொள்ள வேண்டும்.
- தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பரோட்டாவை போட்டு எண்ணெய் தடவி மிதமான தீயில் இருபுறமும் சுட்டு எடுக்க வேண்டும்.
- அவ்வளவுதான் இப்போ பரோட்டா தயார், இவைகளை கடைகளில் அடிப்பது போல் அடித்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் பரோட்டா லேயர் லேயராக வரும்.
- இந்த பரோட்டாவுடன் சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, குருமா ஆகியவை சாப்பிட சுவையாகவும் அருமையாகவும் இருக்கும்.
