“ஒன் லாஸ்ட் டைம்” தளபதி 69 அப்டேட்..!! வைரலாகும் வீடியோ..!!
பாக்ஸ் ஆபிஸ் கிங் மேக்கர் “தளபதி விஜய்” குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய் தற்போது பாக்ஸ் ஆஃபிசையே அதிர வைத்து வருகிறார். ஒரு பின்னனி பாடகரான இவர் இதுவரை 32 பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழில் 68 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விஜய், தற்போது அரசியலில் களமிறங்கவுள்ளதால் சினிமாவை விட்டு விலகி முழு நேரமும் அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார். இதனால் தளபதி 69 தான் அவருக்கு கடைசி படமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது..
இப்படி நடிகர் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் “தளபதி 69′ குறித்த முதல் அறிவிப்பு கடந்த மே 2௦ம் தேதி வெளியானது அதாவது இந்த படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும்., அதில் கதாநாயகியாக தமிழ், மலையாளம் என பல்வேறு மொழிகளில் வலம் வந்து கொண்டிருக்கும் “அபர்ணா பாலமுரளி” நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது..
இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்ட தகவலின் படி கேஜிஎஃப் யஷ் நடிப்பில் வெளியாகவுள்ள டாக்ஸிக் திரைப்படத்தை தயாரித்து வரும் நிறுவனமான “கேவிஎன் (KVN)” நிறுவனம் தளபதி 69 படத்தை தயாரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.. அதேபோல் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது…
Un ratham en ratham verae illai.. Uthirathil vithaithayae anbin sollai ❤️
The Love for Thalapathy
▶️ https://t.co/fd7M28fem1We all grew up with your films & you’ve been a part of our lives every step of the way. Thankyou Thalapathy for entertaining us more than 30 years… pic.twitter.com/4TZi7xHErB
— KVN Productions (@KvnProductions) September 13, 2024
தளபதி 69 படத்தில் தளபதி விஜய்க்கு 275 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.. அரசியலில் களம் காண போகும் தளபதியின் கடைசி படமாக “தளபதி 69” இருப்பதால் அதை பார்த்து பார்த்து தயாரிப்பதாகவும் அரசியல் கலந்த சம்பவம் உறுதி என்றும் தகவல் தெரிவித்துள்ளது.. “ஒன் லாஸ்ட் டைம்” என்ற வீடியோ ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது…
மேலும் இதுபோன்ற அடுத்த பல அப்டேட்களை நாளை மாலை 5 மணிக்கு படக்குழு வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..