இதவிட ஈசியான ஒரு மதிய உணவு செய்யவே முடியாது..!
தேவையான பொருட்கள்:
பச்சரிசி 1 கப்
எண்ணெய் தேவையானது
புளி நெல்லிக்காய் அளவு
கடுகு அரை ஸ்பூன்
கடலைபருப்பு 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன்
வேர்கடலை கைப்பிடி
கறிவேப்பிலை சிறிது
பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
உப்பு தேவையானது
காய்ந்த மிளகாய் 7
தண்ணீர் தேவையானது
செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் அளவிற்கு பச்சரிசி சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி கலந்து விட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு நெல்லிக்காய் அளவிற்கு புளியை ஊறவைத்து இரண்டறை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து பின் வடிக்கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு அரை ஸ்பூன், ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு கைப்பிடி வேர்க்கடலை, ஏழு காய்ந்த மிளகாய், சிறிது கறிவேப்பிலை, அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் கரைத்து வைத்துள்ள புளிக் கரைசல் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பின் அரைத்த அரிசி சேர்த்து கலந்து விட்டு குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
இதனுடன் வறுத்த கருணைக்கிழங்கு, பொரித்த வத்தல் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
அவ்வளவுதான் மதிய உணவு ரெடி, என்ன குழம்பு வைப்பது என்று குழப்பமா இருந்தா டக்குனு இத செய்துடுங்க..
