அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!
இந்தியாவில் எப்போதும் தங்கத்துக்கு தனி மவுசு உள்ளது. மேலும் தொடர்ந்து மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வரும் சூழலில் சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் இறக்கத்தை கண்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா..? அல்லது இறங்குமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.
சென்னையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கம் விலை அதிகரிப்பு., கடந்த மூன்று நாட்களுக்கு முன் குறைந்த தங்கம் விலை தற்போது அதிரடியாக உயர்ந்து இருப்பது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்து 7,811 ரூபாய்க்கும்., சவரனுக்கு 176 ரூபாய் அதிகரித்து 62,488 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 7,160 ரூபாய்க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 57,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 5,915 ரூபாய்க்கும்., சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 47,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி விலை 103 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 1000 ரூபாய் அதிகரித்து 1 லட்சத்து 3000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.